அக்காவின் திருமணம் முடிந்து ஒரு மணிநேரத்தில் உ யிரிழந்த தம்பி : நடந்த விபரீதம்!!

அக்காவின் திருமணம் முடிந்த ஒரு மணி நேரத்தில் தம்பி விபத்தில் ம ரணமடைந்த சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியை சேர்ந்தவர் நஞ்சுண்டன்.

இவரது மனைவி எல்லம்மா. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் இருந்த நிலையில், இளைய மகன் தமிழரசன்(20) கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் தமிழரசனின் அக்காவிற்கு நேற்று காலை அப்பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் காலை 5 மணிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. அக்காவின் திருமணம் முடிந்த ஒரு மணி நேரத்தில் தமிழரசன் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டுவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியதில் தமிழரசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக ப லியானார்.

தவலறிந்த அப்பகுதி பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று தமிழரசனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அக்கா திருமணம் முடிந்த 1 மணி நேரத்தில் தம்பி இறந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share via
Copy link
Powered by Social Snap