ஹேப்பி பர்த்டே ஹஸ்பண்ட்: சாக்சி தோனியின் க்யூட் பதிவு…!

கிரிக்கெட்டின் தல என்று அன்புடன் அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி அவர்களின் 39 வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள் மற்றும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இன்று அதிகாலை 12 மணிமுதல் தல தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறும் பிராவோவின் பாடல், பாவனாவின் ‘குட்டி ஸ்டோரி’ பாடல் உட்பட ஒரு சில பாடல்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தோனியின் அன்பு மனைவி சாக்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் தோனிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஹாப்பி பர்த்டே ஹாஸ்பண்ட் என்று அவர் தெரிவித்துள்ள இந்த க்யூட் பதிவில் கூறியிருப்பதாவது:

உங்களுடைய பிறந்த தேதி குறிப்பது என்னவெனில் இன்னொரு வருடம் வயதானது, இன்னும் கொஞ்சம் நரைத்தது, இன்னும் கொஞ்சம் புத்திசாலித்தனம் மற்றும் இனிமையாக நீங்கள் மாறுவது ஆகும். நீங்கள் ஒரு இனிமையானவர் மற்றும் எங்களுடைய விருப்பத்திற்குரிய பரிசானவர். ஒரு கேக்கை வெட்டி மெழுகுவர்த்தியை ஊதி உங்கள் வாழ்க்கையின் மற்றொரு ஆண்டைக் கொண்டாடுவோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Share via
Copy link
Powered by Social Snap