சுஷாந்த் சிங் கடைசி திரைப்படம் படத்தின் டிரெய்லர்-உலக சாதனை…!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ந் தேதி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் கடைசியாக நடித்த ‘தில் பெச்சாரா’ படம் வருகிற ஜூலை 24-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. நேற்று இப்படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் யூடியூபில் வெளியிட்டார்கள்.

இந்த டிரெய்லர் வெளியான 24 மணி நேரத்திற்குள்ளாகவே அதிக லைக்குகளைப் பெற்று புதிய உலக சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு யூடியூபில் வெளியான சினிமா டிரெய்லர்களில் ஹாலிவுட் படங்களான அவஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் டிரெய்லர் மொத்தமாக 36 லட்சம் லைக்குகளைப் பெற்று முதலிடத்தில் இருந்தது. அந்த சாதனையை ‘தில் பெச்சாரா’ படத்தின் டிரெய்லர் 24 மணி நேரத்திற்குள்ளாகவே முறியடித்துள்ளது. தற்போது வரை ‘தில் பெச்சாரா’ டிரெய்லர் 50 லட்சம் லைக்குகளுடன் 2.5 கோடிக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர்.

முகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தில் பெச்சாரா’ படத்தில் சுஷாந்த் சிங், சைப் அலி கான், சஞ்சனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share via
Copy link
Powered by Social Snap