வீட்டு வளவிற்குள் புதையல் : மகள்களுக்கு கனவில் தந்தை சொன்ன ரகசியம்!!

வேயங்கொடயில் புதையல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட பெண்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மீரிகம பிரதேசத்தை சேர்ந்த இரு பெண்களின் பிறந்த வீடு பல்லேவெல போருக்கமுவ பிரதேசத்தில் அமைந்துள்ளது.

அந்த வீட்டிற்கு பின்னால் புதையல் உள்ளதாகவும், உ யிரிழந்த தந்தை கனவில் வந்து அதனை கூறியதாகவும் கைது செய்யப்பட்ட பெண்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

தந்தை சொன்ன தகவலுக்கு அமைய இருவரின் உதவியுடன் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

வேயங்கொடை பொலிஸ் பரிசோதகருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த இரு பெண்களும் கைது செய்யபட்டுள்ளனர். மற்றைய இருவரும் தப்பி ஓடியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Share via
Copy link
Powered by Social Snap