அமெரிக்காவின் நாசா விண்வெளி கழகம் சூப்பர்சோனிக் என்கின்ற ஒரு விமானத்தை ஒளியின் வேகத்தை விட அதிக வேகத்துடன் சத்தமே கேட்காமல் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது தெரிந்ததே.
இப்படிப்பட்ட ஒரு சூப்பர்சோனிக் விமானம் கடந்த 2019ஆம் ஆண்டு பறக்கவிடப்பட்ட பொழுது அதனுடைய உதறல் மிக அதிகமாகவும் அதே நேரத்தில் அதனுடைய வேகம் காரணமாக வெப்ப ஏற்றம் அதைவிட அதிகமாகவும் இருந்தது.
இப்போது அந்த இரண்டு விவகாரங்களையும் சீர்திருத்தம் செய்து புதிய சூப்பர்சானிக் X 59 தயாராகி விட்டதாகவும் இந்த ஆண்டு நிறைவை எட்டி பரிபூரணமாக முடிந்துவிடும் என்றும் 2021 பரீட்சார்த்த பறப்பில் நடைபெறும் என்றும் 2022 பாவனைக்கு வந்துவிடும் என்றும் மகிழ்ச்சி செய்தியை வெளியிட்டு இருக்கின்றது.
இந்த விமானம் சாதாரண விமானம் அல்லா. விமானத்தினுடைய அரைப்பகுதி அதனுடைய மூக்காக இருக்கின்றது. காரணம் ஒலியினுடைய சுவரை உடைத்து கிழித்து துளைத்து செல்ல வேண்டியதாக இருக்கின்றது .29 மீட்டர் நீளம் 9 மீட்டர் சிறகுகள் 14 ஆயிரத்து 700 கிலோ எடை, 1590 கிலோ மீட்டர் வேகம், 16800 மீட்டர் உயரத்தில் பறக்கக் கூடியது. இந்த விமானத்தில்னுடைய வருகை பொருளாதார ரீதியாக புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நாசா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. நாசாவோடு சேர்ந்து லொக்கிட் மாட்டின் என்கின்ற புகழ்பெற்ற விமான தயாரிப்பு நிறுவனம் உருவாக்கி இருப்பதாக இன்றைய விஞ்ஞான செய்திகள் தெரிவிக்கின்றன .