போதைப் பொருள் கடத்தலில் குற்றவாளிகளாக காணப்படும் பொலீஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு எதிராக மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று போலீசார் விரும்புகின்றனர்
இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகன போதைப்பொருள் ஒழிப்பு பிரிவில் பணியாற்றும் சந்தேகத்துக்கிடமான அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்தி சட்டமா அதிபர் ஊடாக குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.
1979 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையில் மரணதண்டனை அமல்படுத்தப்படவில்லை. இருப்பினும் போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்க நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்படும் என்றும் ரோகன குறிப்பிட்டர்
18 போலீஸ் அதிகாரிகளின் நடத்தைகள் போலீசாருக்கு மிகப்பெரிய இழிவை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் எந்த அதிகாரியும் ஊழலில் ஈடுபட்டால் அவர்களை பாதுகாக்கவோ அல்லது அவருக்கு மேல் கருணை காட்ட முடியாது என்றும் அவர் கூறினார்