
வீட்டில் இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போது கட்டாய திருமணம் செய்து வைத்ததாக கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார் 15 வயதான மாணவி சுமதி.
வேலூர் மாவட்டம் காட்பாடி கழிஞ்சூரைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி(பெயர் மாற்றப்பட்டுள்ளது).
இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்த நிலையில் அதிகாரிகள் அதை தடுத்தி நிறுத்தினர்.
இந்நிலையில் விருதம்பட்டு காவல்நிலையம் வந்த சிறுமி, இரவில் தனக்கு வலுக்கட்டாயமாக திருமணம் நடந்ததாக புகார் அளித்துள்ளார்.
இது குறித்து சிறுமி காவல் நிலையத்தில் தெரிவிக்கும் போது.”எனக்கு குழந்தை திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்தனர். அதை நான் மறுத்தபோதும் கூட, நேற்று இரவு என் பாட்டி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது என்னுடைய கைகளை கட்டி விட்டு வலுக்கட்டாயமாக இரவு சுமார் 11.30 மணியளவில் கழுத்தில் தாலி கட்டி விட்டனர்.
நான் விடிந்த பிறகு யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வந்து புகார் அளிக்க வந்தேன் என தெரிவித்தார்.
இதனையடுத்து ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர்கள் சிறுமியை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு கருதி காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர், சிறுமி அளித்த புகாரின் பேரில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.