பிரபாஸ் அடுத்த படத்தின் அட்டகாசமான டைட்டில்-பர்ஸ்ட்லுக் ரிலீஸ்….!

பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்கள் மூலம் உலகப் புகழ்பெற்ற நடிகர் பிரபாஸ் நடித்த அடுத்த திரைப்படமான ’சாஹோ’ எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால் சூப்பர் ஹிட் படம் ஒன்றை கொடுக்க அவர் முடிவு செய்து கமிட்டான படம்தான் ’பிரபாஸ் 20’. இந்த படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கிற்கு முன் வரை விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாவதாக உள்ள செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்திற்கு ’ராதே ஷ்யாம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் அட்டகாசமான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றும் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கலர்புல்லான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என 4 மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தை ராதா கிருஷ்ணகுமார் என்பவர் இயக்கி வருகிறார். பிரகாஷ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு முடிந்ததும் தொடங்கும் என்று கூறப்படுகிறது

Share via
Copy link
Powered by Social Snap