முதல்முறையாக பொதுமீடியாவில் தலைகாட்டிய குமரிமுத்து மகள்!

பிரபல நகைச்சுவை நடிகர் குமரிமுத்துவை அனைவரும் அறிந்தது உண்டு. ஆனால் அவரது குடும்பம் குறித்து இதுவரை யாரும் அறிந்ததில்லை. இந்த நிலையில் முதல் முறையாக குமரிமுத்துவின் மகள் சமூக வலைதளம் மூலம் தன்னை அறிமுகம் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

குமரிமுத்து மகளாகிய எனது பெயர் எலிசபெத். இதுவரை நான் பொது மீடியாவுக்கு வந்ததில்லை. முதல் முறையாக வந்து ஒரு சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எல்லோருக்கும் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த ஆசை எல்லோருக்கும் நிறைவேறுவதில்லை. ஆனால் எல்லோரும் வெற்றி பெறலாம் அதற்கு என்ன செய்யலாம் என்பதை என்னுடைய அனுபவங்கள் மற்றும் என்னுடைய தகப்பனார் அனுபவங்களை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நாம் வாழ்க்கையில் வெற்றி பெற முதலில் நாம் செய்ய வேண்டிய ஒரே ஒரு சின்ன விஷயம் அமைதி. எவ்வளவுக்கெவ்வளவு நாம் வாழ்க்கையில் அமைதியாக இருக்கின்றோமோ, அமைதியை கடைப் பிடிக்கின்றோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நாம் வெற்றி பெறலாம் என்று எலிசபெத் குமரிமுத்து கூறியுள்ளார். மேலும் மீண்டும் அடுத்தடுத்து தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குமரிமுத்து மகள் எலிசபெத்தின் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Share via
Copy link
Powered by Social Snap