December 3
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு 2019/12/12 அன்று அவுஸ்திரேலியா rotary club ஆனது உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பாடல் ஒன்றை வெளியிட்டது
எத்தடை வரினும் அத் தடையை உடைத்து மன உறுதியோடு போராடி வாழ்க்கையில் வெற்றி கொள்ளும் ஒரு உன்னத உந்து சக்தியை கொடுக்கும் அற்புதமான அந்தப் பாடலை வழங்கியுள்ளார்கள் அவுஸ்திரேலியா rotary club பினர்.
நீண்ட காலமாக உயிரிழை அமைப்புடன் மிகவும் நெருக்கமான செயற்பாட்டை செய்துவரும் இந்த Australian rotary club ஆனது 2019 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு நிகழ்வுகளுக்கு தமது ஆதரவையும் பங்களிப்பையும் செய்து அவர்களுக்கான ஒரு உந்துசக்தியாக ஒரு உறவுப் பாலமாக தமிழ் மக்களிடத்தில் ஒரு பகுதியாக செயற்படுகின்றார்கள்
இவர்களின் சேவை மிகவும் பெரியது.
”இந்த முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட நபர்கள் சோர்ந்துவிடாமல் துவண்டுவிடாமல் வாழ்க்கையில் தாமும் மற்றவர்களைப் போல் சாதாரண மனிதனைப் போல் தமது செயற்பாட்டை செய்ய முடியும் என்று நிரூபித்து உள்ளார்கள்”.
இவர்களை எமது செய்தி நிறுவனம் சார்பாக வாழ்த்தி நிற்கின்றோம் தமிழி.கொம் செய்தி நிறுவனத்தினர்